தேர்தல் கண்காணிப்பு தீவிரம்...! சென்னையில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.52 கோடி பறக்கும் படையினரால் பறிமுதல்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் சென்னை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.52 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட சுவாமி சிவானந்தா சாலையில் நேற்று காலை ஆந்திர பதிவெண் கொண்ட காரை சோதனையிட்டபோது, அதில் 12 கிலோ எடையுள்ள வெள்ளி விளக்கு மற்றும் தட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

கிழக்கு கடற்கரைச் சாலை நிகழ்ச்சி ஒன்றிற்காக கொண்டு செல்லப்பட்ட இப்பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல், எல்லீஸ் சாலை - வாலாஜா சந்திப்பு அருகே துறைமுகம் தொகுதி பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த அனில்குமார் சிங் என்பவரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இப்பணம் அசோக் நகரைச் சேர்ந்த கமல் என்ற பைனான்சியருக்குச் சொந்தமானது எனத் தெரிந்தாலும், ஆவணங்கள் இல்லாததால் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மற்றொரு சம்பவமாக, சிந்தாதிரிப்பேட்டை காசினோ திரையரங்கம் அருகே நெய்வேலியைச் சேர்ந்த கணேசன் மற்றும் அவரது மனைவியிடம் இருந்து ரூ.65,000 பறிமுதல் செய்யப்பட்டது.

அது வாடகை வீட்டுக்கான முன்பணம் என்று அவர்கள் கூறிய போதிலும், தகுந்த ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்தப் பணத்தைக் கைப்பற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Intensified Election Surveillance 1point52 Crore Transported Without Documentation Seized by Flying Squads Chennai


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->