காதலியை கரம் பிடித்த டிடிஎப் வாசன் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை பகுதியைச் சேர்ந்தவர் டி.டி.எப். வாசன். பிரபல யூடியூபரான இவர் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இந்த நிலையில், டி.டி.எப் வாசன் ஐந்து வருடமாக காதலித்து வந்த தனது மாமன் மகளை தற்போது திருமணம் செய்துள்ளார். தனது திருமணப் புகைப்படங்களை டி.டி.எப். வாசன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதிலும் குறிப்பாக மனைவியின் காலில் டி.டி.எப். வாசன் மெட்டி போடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதைப்பார்த்த பலரும் டி.டி.எப். வாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youtuber ttf vasan married photos viral


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->