டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து..!
Delhi AIIMS staff leaves canceled
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய எல்லையோர நகரங்களை குறிவைத்து ஏவப்படும் பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், பதட்டமான இந்த சூழலில் எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, டில்லி எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவின்படி, மருத்துவ காரணங்களுக்காக தவிர, எந்தவொரு அதிகாரிக்கும் நிலைய விடுப்பு உட்பட எந்த வகையான விடுப்பும் மறு உத்தரவு வரும் வரை வழங்கப்படக்கூடாது.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட விடுப்பு ஏதேனும் இருந்தால், அது ரத்து செய்யப்படுகிறது என்றும், விடுப்பில் உள்ள அதிகாரிகள் உடனடியாக தங்கள் பணிகளைத் தொடங்க அறிவுறுத்தப் படுகிறார்கள். என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Delhi AIIMS staff leaves canceled