கோமாவில் இருந்து மீண்டு வந்தேன்… “இது எனக்கு மறுபிறவி” – முமைத் கான் உருக்கம்!
I recovered from a coma This is a rebirth for me Mumaid Khan Urukkam
முமைத் கான் – ஒரு காலத்தில் ஐட்டம் பாடல்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை. “என் பேரு மீனாகுமாரி” என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு தமிழக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர். தற்போது அளித்துள்ள பேட்டியில், தாம் 15 நாட்கள் கோமாவில் இருந்ததாகவும், அது தன்னுடைய வாழ்க்கையில் ஒரு மறுபிறவியாக அமைந்ததாகவும் கூறியுள்ளார்.
2002ஆம் ஆண்டு பாலிவுட் ஐட்டம் பாடல்களின் மூலம் சினிமாவில் அறிமுகமான முமைத் கான், பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்தார். குறிப்பாக வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற “நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே” பாடலிலும், போக்கிரி படத்தின் “என் செல்லப்பேரு ஆப்பிள்” பாடலிலும், கந்தசாமி படத்தின் “என் பேரு மீனாகுமாரி” பாடலிலும் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.
ஐட்டம் பாடல்களோடு மட்டுமல்லாமல், பல படங்களில் கௌரவ வேடங்களிலும் நடித்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமா வாய்ப்புகள் குறைந்ததால், திரைப்படங்களிலிருந்து விலகி வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்.
சமீபத்தில் இந்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது படுக்கையிலிருந்து கீழே விழுந்து தலையில் கடுமையாக அடிபட்டேன். மூளைக்கு செல்லும் ஐந்து நரம்புகள் வெடித்துவிட்டன. 15 நாட்கள் கோமாவில் இருந்தேன். உயிர் பிழைப்பே கேள்விக்குறியாக இருந்தது” என்று தெரிவித்தார்.
மேலும், “கோமாவில் இருந்து மீண்ட பிறகு மருத்துவர்கள் குறைந்தது 7 ஆண்டுகள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். கனமான பொருட்களை தூக்க கூடாது, அதிக வேலை செய்ய கூடாது என்றனர். அதனால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறேன்,” என்றார்.
“இந்த 7 ஆண்டுகளில் என்னை நான் அறிந்து கொண்டேன். என்னை முமைத் கானாக்கி அழகு பார்த்த கடவுள், பின்னர் என் கரியருக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் போல தோன்றுகிறது,” என மனவேதனையுடன் கூறியுள்ளார்.
முன்னொரு காலத்தில் திரையுலகில் பிஸியாக இருந்த நடிகை, இன்று வாழ்க்கை குறித்து தன்னிலைப் பார்வையுடன் பேசுவது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவரது இந்த உருக்கமான பேட்டி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
I recovered from a coma This is a rebirth for me Mumaid Khan Urukkam