'ஜனநாயகன்' லீக் அதிர்ச்சி...! தயாரிப்பு நிறுவனம் எடுத்த கடும் சட்ட நடவடிக்கை...!
Jananayakan league shocks Strict legal action taken by production company
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த சம்பவம், திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் KVN புரொடக்சன்ஸ், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி முக்கியமான சட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

தணிக்கை குழுவின் தாமதம் காரணமாக வெளியீடு தள்ளிப்போன நிலையில் இருந்த இப்படம், கடந்த 9ஆம் தேதி திடீரென இணையத்தில் கசிந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
படத்தின் உழைப்பையும், முதலீட்டையும் பாதிக்கும் இந்த சம்பவம் குறித்து, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது.
மனுவாக தாக்கல் செய்தால் விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த விவகாரத்தில் முறையான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை அதற்கான விசாரணை நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த வழக்கு திரையுலகில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.இதற்கிடையில், இந்த சட்டவிரோத கசிவு தொடர்பாக தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டதாக சந்தேகிக்கப்படும் 6 பேரை காவலர்கள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.‘ஜனநாயகன்’ திரைப்பட லீக் விவகாரம், படைப்பாளர்களின் உரிமைகள் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்து மீண்டும் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Jananayakan league shocks Strict legal action taken by production company