துரோகத்தின் உச்சம்! தூங்கிய கணவரை தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி...! - கள்ளக்காதலனுடன் பயங்கரம்
height betrayal wife killed her sleeping husband by crushing him pillow Horror murderer
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (28), தையல் தொழிலில் ஈடுபட்டு குடும்பத்துடன் ரெட்டியப்பட்டியில் வசித்து வந்தார். வழக்கம்போல் பணியை முடித்து வீடு திரும்பிய அவர், உணவு உட்கொண்ட பின் தூங்கிய நிலையில், மறுநாள் காலை படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவலர்கள் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், ரவிக்குமாரின் காது மற்றும் வாயில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது சந்தேகத்தை கிளப்பியது. இதையடுத்து அவரது மனைவி கார்த்திகாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டதில், அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கார்த்திகாவுக்கும், நத்தம் பகுதியைச் சேர்ந்த மின்தொழிலாளி விக்னேஷ் (23) என்பவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியதாகவும், இது கணவர் ரவிக்குமாருக்கு தெரியவந்ததால் குடும்பத்தில் பதற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை அகற்ற தீர்மானித்த கார்த்திகா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 16-ம் தேதி இரவு, ரவிக்குமார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில், கார்த்திகா தனது செல்போன் மூலம் விக்னேஷை அழைத்துள்ளார்.
அவருடன் வந்த நாகராஜ் (28) என்பவரும் சேர்ந்து, மூவரும் இணைந்து தலையணையால் முகத்தை அழுத்தி ரவிக்குமாரை கொடூரமாகக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் காலை கணவர் மர்மமாக உயிரிழந்ததாக நாடகம் ஆடிய கார்த்திகாவின் செயல் காவலர்களின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்கை சந்தேக மரணத்திலிருந்து கொலை வழக்காக மாற்றி, கார்த்திகா, விக்னேஷ் மற்றும் நாகராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
height betrayal wife killed her sleeping husband by crushing him pillow Horror murderer