நார்மல் பீப்பிள் கிடையாது சர்ச்சை! உண்மை வேறு! வெட்டிஓட்டி எங்களை உரிச்சு எடுத்துட்டாங்க – விக்னேஷ் சிவன் விளக்கம்!
The truth is different They cut us off and took us away Vignesh Shivan explanation
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியைச் சுற்றி கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய “நார்மல் பீப்பிள் கிடையாது” என்ற கருத்து குறித்து, தற்போது விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “அன்று நடந்த விஷயம் முற்றிலும் வேறுபட்டது. ஆனால் அதை வேறு விதமாக மாற்றி எங்களை கடுமையாக விமர்சித்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு நானும் நயன்தாராவும் சென்றபோது, இன்னும் சாப்பிடவில்லை என்பதால் 15 நிமிடம் காத்திருக்க சொல்லினேன். ஆனால் அங்கு இருந்த ஒருவரோ, ‘எல்லோரும் காத்திருக்கிறார்கள், முதலில் புகைப்படம் எடுத்துக்கொள்ளட்டும்’ என்றார்.”
அதற்குப் பதிலாக, “ஒருவராக அல்லாமல் குழுவாக புகைப்படம் எடுத்தால் விரைவாக முடியும்” எனத் தான் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், அங்கு இருந்த ஒருவர் தான் “நாம் எல்லாம் நார்மல் பீப்பிள் கிடையாது, நாம் இன்ஃபுளியன்சர்கள்” என்று கூறியதாகவும், அது தங்களை குறித்ததாக அல்ல என்றும் விக்னேஷ் சிவன் விளக்கினார்.
“அந்த வீடியோ வைரலாகி எங்களை விமர்சிக்கத் தொடங்கினர். பின்னர் அந்த நபரிடம் வீடியோவை நீக்கச் சொன்னேன். ஆனால் அவர் ‘இப்போதுதான் லைக்குகள் அதிகமாக வருகிறது, நாளைக்கு டெலிட் செய்கிறேன்’ என்று கூறினார். லைக்குகளுக்காக இப்படிச் செய்வது என்னை அதிர்ச்சியடையச் செய்தது,” என அவர் வேதனை தெரிவித்தார்.
இந்த விளக்கத்தால், அந்த சர்ச்சையின் பின்னணியில் இருந்த உண்மை குறித்து ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது.
English Summary
The truth is different They cut us off and took us away Vignesh Shivan explanation