'ஜெயிலர் 2' டிஜிட்டல் உரிமையை தட்டிப்பறித்த முன்னணி நிறுவனம்...! - விலையை கேட்டு ஆடிப்போன கோலிவுட்
Leading company snags digital rights Jailer 2 Kollywood bids price
தமிழ் திரைப்பட உலகில் அதிரடி வெற்றியைப் பதிவு செய்த ஜெயிலர், ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றதுடன் வசூல் சாதனைகளையும் படைத்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் மையக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் தங்களது நடிப்பால் கவனம் ஈர்த்தனர். அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை கவர்ந்தன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம், ரசிகர்களிடையே நீண்டநாள் பேசுபொருளாக மாறியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே கூட்டணியில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம் குறித்து எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், முன்பு ஷாருக்கான் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட கதாபாத்திரத்தில், தற்போது பவன் கல்யாண் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதனிடையே, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோ தளம், இப்படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.160 கோடி மதிப்பில் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக ‘ஜெயிலர்’ முதல் பாகத்தின் ஓ.டி.டி உரிமம் ரூ.100 கோடிக்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் தொடர்ச்சிப் படம் மேலும் உயர்ந்த மதிப்பில் விற்பனையானது திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.மொத்தத்தில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளுக்கு வரும் முன்பே வணிகரீதியாக பெரிய சாதனையை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Leading company snags digital rights Jailer 2 Kollywood bids price