பவன் கல்யாண் மற்றும் ராம் சரணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கிண்டல்; பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் கைது..! - Seithipunal
Seithipunal


ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் திருமண வாழ்க்கை குறித்தும், நடிகர் ராம் சரணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கிண்டலாகக் பேசிய அனுதீப் கதிகாலா என்பவர் ஆந்திராவில் ஸ்டாண்ட் அப் காமெடியன் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஐஐடி பட்டதாரியான இவர், ஹைதராபாத்தில் உள்ள 'சில்லி சவுத் காமெடி கிளப்' என்ற அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார். சமீபத்தில், அனுதீப் தனது நகைச்சுவை வீடியோ ஒன்றை அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், ஆந்திரா துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் திருமண வாழ்க்கை குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், நடிகர் ராம் சரணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கிண்டலாகக் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பார்த்த பவன் கல்யாண் மற்றும் ராம் சரண் ரசிகர்கள் வெகுண்டெழுந்துள்ளனர்.

இந்த அவதூறு வீடியோ தொடர்பாக ஜனசேனா கட்சித் தொண்டர் ஒருவர் ஆந்திராவின் காக்கிநாடா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அனுதீப் மீது அவதூறு பரப்புதல் மற்றும் பெண்களின் கண்ணியத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரயாக்ராஜில் உள்ள தனது பெற்றோரைப் பார்க்கச் சென்றிருந்த அனுதீப்பை, ஆந்திர மாநிலக் காவல்துறையினர் அங்குள்ள ஒரு பூங்காவில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், "யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை, ஒருவேளை எனது நகைச்சுவை யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்கு மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றுகுறிப்பிட்டு இருந்தார். ஆனாலும், பவன் கல்யாணின் ரசிகர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous Stand up Comedian Arrested for Mocking the Personal Lives of Pawan Kalyan and Ram Charan


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->