‘தளபதி 70’ வருமா? தயாரிப்பாளரின் நஷ்டத்தை ஈடு செய்ய விஜய் எடுக்கும் அதிரடி முடிவு!
Will Thalapathy 70 be released Vijay drastic decision to compensate the producer losses
நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை முன்னிட்டு திரைப்படங்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கலாம் என்ற தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ‘தளபதி 69’ தான் தனது கடைசி படம் என அறிவித்திருந்த விஜய், அந்தப் படத்தை தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஏற்பட்டதாக கூறப்படும் நிதி சிக்கல்களை சமாளிக்க உதவும் வகையில், மேலும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஏற்பட்ட சுணக்கம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளரின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக மீண்டும் ஒத்துழைக்க விஜய் முன்வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், அது விஜய்யின் 70வது திரைப்படமாக அமையும். இதுவரை ‘69’ தான் இறுதி படம் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது பெரிய ஆச்சரியமாக அமைந்துள்ளது.
ஒரு முன்னணி நடிகர் தனது அரசியல் வாழ்க்கைக்குத் தயாராகும் நேரத்தில், தயாரிப்பாளரின் நலனுக்காக இப்படியான முடிவெடுக்கிறார் என்பது அவரது தொழில்முறை நேர்மையை வெளிப்படுத்துகிறது என திரை விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், இந்த முடிவு அவரது அரசியல் பயணத்தில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அரசியல் பணிகளில் முழுமையாக ஈடுபடவிருக்கும் நிலையில், மீண்டும் திரைப்படத்தில் நடிப்பது அவரது அடுத்த கட்ட நகர்வுகளை தாமதப்படுத்துமா அல்லது ரசிகர்களுடன் இணைப்பைத் தொடரும் யுக்தியா என்ற விவாதமும் நிலவுகிறது.
இதுவரை ‘தளபதி 70’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாதபோதிலும், இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி உறுதியாகும் பட்சத்தில், விஜய்யின் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Will Thalapathy 70 be released Vijay drastic decision to compensate the producer losses