தல தோனி எனக்கு கொடுத்த அட்வைஸ் இதுதான்! கேப்டன்சிக்கு உதவியது – ஆயுஷ் மாத்ரே ஓபன்டாக்!
This is the advice Dhoni gave me It helped me with captaincy Ayush Mathre Open Talk
இந்திய பிரீமியர் லீக் (IPL) 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, தனது ஆட்டத்தாலும் அணுகுமுறையாலும் கவனம் ஈர்த்துள்ளார். கடந்த ஆண்டு காயம் காரணமாக சில முக்கிய வீரர்கள் இல்லாத சூழலில் மாற்று வீரராக அணியில் இணைந்த அவர், கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த 17 வயதான ஆயுஷ் மாத்ரே, 2025 IPL தொடரில் முதன்முறையாக CSK அணியில் இடம்பிடித்தார். அதன் பின்னர், இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் கேப்டனாக இருந்து உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தார். அந்த வெற்றியின் பின்னர், 2026 IPL-ல் அவர் நிரந்தர இடத்தைப் பெற்றுள்ளார்.
தற்போது துவக்க வீரராக இல்லாமல் மூன்றாவது இடத்தில் களமிறங்கி வரும் அவர், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் 38 ரன்கள் (6 பவுண்டரி, 2 சிக்ஸர்) அடித்து அணிக்கு வலுசேர்த்தார்.
இந்த வளர்ச்சி குறித்து பேசிய ஆயுஷ் மாத்ரே, CSK அணியில் விளையாடுவது தனது கனவு என்றும், தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே போன்ற வீரர்களுடன் இணைந்து விளையாடுவது பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்தார். “சென்னை அணி எனக்கு ஒரு குடும்பம் போல உள்ளது” என அவர் கூறினார்.
மேலும், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடமிருந்து பெற்ற ஆலோசனைகள் தனது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, “கோபத்தில் முடிவெடுக்காதே; அழுத்தமான சூழலிலும் அமைதியாக இருக்க வேண்டும்” என்ற தோனியின் அறிவுரை தனது கேப்டன்சியிலும் உதவியதாக தெரிவித்துள்ளார்.
இளம் வயதிலேயே திறமை, அமைதி மற்றும் தலைமைத்துவ குணங்களை வெளிப்படுத்தி வரும் ஆயுஷ் மாத்ரே, எதிர்கால இந்திய அணிக்கான முக்கிய வீரராக உருவெடுக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
This is the advice Dhoni gave me It helped me with captaincy Ayush Mathre Open Talk