சீதை வாய்ப்பை நான் மறுக்கவில்லை! சாய் பல்லவி தேர்வானது இப்படித்தான்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீநிதி ஷெட்டி! - Seithipunal
Seithipunal


ராமாயணா திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிப்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் வதந்திகளும் பரவி வந்த நிலையில், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி அளித்துள்ள பேட்டி அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி, சீதை கதாபாத்திரத்திற்காக தன்னை முதலில் தேர்வு செய்ததாகவும், தானே அந்த வாய்ப்பை நிராகரித்ததால் சாய் பல்லவிக்கு சென்றதாகவும் பரவிய தகவல்கள் உண்மையல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "நான்தான் சீதை கதாபாத்திரத்திற்காக ஆடிஷனில் பங்கேற்றேன். ஆனால் அந்த ஆடிஷனில் நான் தேர்வாகவில்லை. அந்த வாய்ப்பை நான் மறுத்தேன் என்ற தகவல் உண்மையல்ல" என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீநிதி ஷெட்டி, கேஜிஎஃப் படங்களில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றார். பின்னர் தமிழில் விக்ரமுடன் கோப்ரா திரைப்படத்திலும், தெலுங்கில் நானியுடன் ஹிட்: தி தேர்ட் கேஸ் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் ஆதர்ஷ குடும்ப ஹவுஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ராமாயணா திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக பல முன்னணி நடிகைகள் ஆடிஷனில் பங்கேற்றதாகவும், அதில் சாய் பல்லவி தேர்வானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஸ்ரீநிதி ஷெட்டியின் விளக்கம் சமூக வலைதளங்களில் பரவி வந்த பல வதந்திகளுக்கு முடிவுகட்டியுள்ளது.

இதையடுத்து, சாய் பல்லவி திறமையின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், கடுமையான தேர்வு முறையை கடந்து அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I didnot turn down the role of Sita Here how Sai Pallavi was selected Srinidhi Shetty puts an end to the rumors


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->