கல்லூரி மாணவர்களை குறிவைத்த போதைப்பொருள் கும்பல்...! - கஞ்சா சாக்லெட் மற்றும் மெத்தபெட்டமினுடன் 6 பேர் கைது - Seithipunal
Seithipunal


கோவையில் வெவ்வேறு பகுதிகளில் காவலர்கள் நடத்திய தீவிர சோதனையில், கஞ்சா கலந்த சாக்லெட்டுகள் மற்றும் உயர்ரக போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள், 58 கிராம் மெத்தபெட்டமின் மற்றும் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கோவை உக்கடம் பேருந்து நிலையம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள மறைவான இடத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவலர்கள் கண்காணித்தனர்.அவர்கள் கஞ்சா கலந்த சாக்லெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்ததை அடுத்து, காவலர்கள் விரைந்து சென்று 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.

இந்த விசாரணையில், அவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இலந்தைகுளத்தைச் சேர்ந்த அருண் (20), தேனி மாவட்டம் அல்லிநகரம் பழைய அரசு மருத்துவமனை சாலை பகுதியைச் சேர்ந்த புவனேஸ் (22), மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் சாலை பகுதியைச் சேர்ந்த ராமன் (23) என்பது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா கலந்த சாக்லெட்டுகள் மற்றும் ரூ.67 ஆயிரத்து 500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதற்கிடையே, கோவை சுந்தராபுரம்-மதுக்கரை சாலை மோகன் நகர் பாலம் பகுதியில் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் குறிச்சி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பீமா (25), மதுரை அழகர்கோவில் பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி என்ற பாக்கு (27), கொடைக்கானலைச் சேர்ந்த கோபிநாத் (21) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் உயர்ரக போதைப்பொருளான மெத்தபெட்டமினை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயர்ரக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 58 கிராம் மெத்தபெட்டமின் மற்றும் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதை தடுக்க காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drug gang targets college students 6 arrested with cannabis chocolate and methamphetamine


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->