'உரிமைகளுக்காகப் போராடுங்கள்...நான் துணையிருப்பேன்'...! - ராகுல்காந்தியின் புதிய 'சத்யாகிரஹா' தளம் தொடக்கம் - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களது உரிமைகளுக்காக போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அந்தப் போராட்டங்களுக்கு ஒருங்கிணைப்பையும் ஆதரவையும் வழங்கும் வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ‘சத்யாகிரஹா’ என்ற இணையதளத்தை நேற்று தொடங்கினார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது,“நாடு முழுவதும் உண்மை நசுக்கப்படுவதை நீங்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள்.

பல்வேறு பகுதிகளில் எண்ணற்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெண்கள், மாணவர்கள், இளம் தலைமுறையினர், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களது உரிமைகளுக்காக குரல் எழுப்பி வருகின்றனர்.

இவ்வாறு நடைபெறும் போராட்டங்களை ஒரே தளத்தின் கீழ் ஒருங்கிணைப்பதற்காக ‘சத்யாகிரஹா’ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் நடைபெறும் போராட்டம் குறித்த விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்.

உங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பதை நாங்கள் ஆராய்ந்து, அதற்கேற்ப துணை நிற்போம்.எங்கெல்லாம் உண்மை நசுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் மக்களுக்கு ஆதரவாக நிற்பது எனது கடமை.

உங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உங்களுடன் உறுதியாக துணை நிற்பேன்.”இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fight for your rights I will support you Rahul Gandhi launches new Satyagraha platform


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->