அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ முருகமாறன் தவெகவில் இணைந்தார்! - Seithipunal
Seithipunal


காட்டுமன்னார்கோவில் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான என். முருகமாறன், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.

அதிமுகவிற்கு ராஜினாமா கடிதம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய முன்னாள் எம்.எல்.ஏ முருகமாறன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

முருகமாறனின் ராஜினாமா கடிதம்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவலியோடு என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன்.

ஒரு நல்ல தலைவர் தான் தலைமையேற்றுள்ள இயக்கத்தின் அனைத்து தொண்டர்களையும் தாயன்பு கொண்டு அரவணைக்க வேண்டும். தலைவருக்கு துன்பம் என்றால் தொண்டர்கள் கண்ணீர் சிந்த வேண்டும். தொண்டர்களுக்கு துன்பம், துயரம் என்றால் தலைவரின் கரங்கள் கண்ணீர் துடைக்க வேண்டும். 

மாண்புமிகு அம்மா அவர்கள் மறைவிற்கு பின் மாற்று இயக்கத்தில் இருந்து கோடிகள் என்னை பலமுறை முத்தமிட்ட போது அவற்றை புறந்தள்ளி கொள்கை வழி நின்று கழகத்தின் மாண்பை காத்த உண்மையை தொண்டன் நான். 

“மதியாதார் வாசல் மிதியாதே” என்ற முதுமொழியை நெஞ்சில் நிறுத்துகிறேன்.

மாணவன் பருவம் முதல் நகமும் சதையுமாக உடலும் உயிருமாக பயணித்து பணியாற்றிய இப்பேரியக்கத்தில் இருந்து விலகி கொள்ள வேண்டிய சூழ்நிலையை தலைமை எனக்கு ஏற்படுத்திய நிலையை எண்ணி மனம் வலிக்கின்றது. “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னை வளர்த்த கட்சி”  “நான் வளர்த்த கட்சி” என்ற நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்து நிற்கும்.

“ஒரு போரியக்கத்தின் தலைவர் எப்பொழுதும் தவறான முடிவின் பின்னே செல்கின்றார்”.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former AIADMK MLA N Murugumaran Quits AIADMK Joins TVK Ahead of By-Elections


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->