ஆகஸ்ட் 08-இல் இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி, தமிழகம் வருகைத் தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..! - Seithipunal
Seithipunal


இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 08-ஆம் தேதி புதுச்சேரி மற்றும் தமிழகத்துக்கு வருகை தரவுள்ளார். அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரி காவல் துறையின் நீண்டகால சிறப்பான சேவை, மிகச் சிறந்த ஒழுக்கம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர்கள் ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, குடியரசுத் தலைவரின் உயரிய 'வண்ண விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயரிய விருதினை வழங்கும் விழா, புதுச்சேரி காவல் மைதானத்தில் கடந்த மாதமே நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதில் பங்கேற்று விருதினை வழங்கவிருந்தார். ஆனால், டெல்லியில் சிஜேபி இயக்கத்தினர் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த தால் அவரது பாதுகாப்பு கருதி புதுச்சேரி பயணம் அப்போது ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த விழா மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 08-ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

வரும் 08-ஆம் தேதி இரவு, புதுச்சேரி வந்தடையும் அமித் ஷா, அன்றைய தினம் அங்கு தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் மறுநாள் 09-ஆம் தேதி காலை புதுச்சேரி காவல் மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்கிறார். அங்கு புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் 'வண்ண விருதின' வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

அடுத்து, அன்றைய தினம் மதியம், புதுச்சேரியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, திருவண்ணாமலைக்குச் செல்லவுள்ளார். அங்குள்ள புகழ்பெற்ற ரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து, அண்ணாமலையார் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடையும் அமித்ஷா, தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, அன்று இரவே அமித் ஷா தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah to visit Puducherry and Tamil Nadu on two-day visit on August 8th


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->