தமிழ்நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்; ஒரே நாளில் 244 பேருக்கு காய்ச்சல் உறுதி..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கணக்கின்  படி, கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி மட்டும், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 244 உயர்ந்துள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட சென்னை மாவட்டம், டெங்கு பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை, மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிகளவில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் மொத்தம் 57 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் 25 ஆயிரத்து 278 டெங்கு பாதிப்புகளும், 10 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தன. இந்நிலையில், இந்த ஆண்டு, ஜனவரி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை, 16 ஆயிரத்து 577 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுவரை 09 பேர் உயிரிழந்தனர். இந்த புள்ளி விவரங்கள் டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவி வருவதன் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dengue confirmed in 244 people in Tamil Nadu in a single day


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->