20வது ஆசிய விளையாட்டு போட்டி; ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்ற தொடக்க விழா..!
Grand opening ceremony of the 20th Asian Games held in Japan
ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழாவில் இந்தியா சார்பில் மனு பாக்கர், பவன் ஷெராவத் ஆகியோர் தேசிய கொடியேந்தி அணியை வழி நடத்தினர்.
20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பான் நாட்டின் நகோயாவில்(Nagoya) சனிக்கிழமை தொடங்கி அக்டோபர் 04-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான தொடக்க விழா நகோயாவில் உள்ள மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளை ஜப்பான் பேரரசர் நருஹிடோ முறைப்படி தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம் மற்றும் சாகசங்கள் இடம்பெற்றன. ஜப்பான் தனது தொழில்நுட்ப வலிமையையும், பண்பாட்டையும் எளிமையாகவும் வண்ணமயமாகவும் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
2026 -ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில், 45 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் தங்களது தேசிய கொடியுடன் அணிவகுத்து வந்தனர். இந்திய அணிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் கபடி வீரர் பவன் ஷெராவத் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
English Summary
Grand opening ceremony of the 20th Asian Games held in Japan