ரூ. 390-க்கு Subscribe; அரை நிர்வாண வீடியோ போட்டு மாதம் 12 லட்சம் வருமானம்; போலீசிடம் சிக்கிய விஷ்ணு பிரியா..!
Vishnu Priya lands in police custody after earning a monthly income of 12 lakhs by posting semi nude videos for subscribers paying rs390
இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் அரை நிர்வாண வீடியோவை பதிவிட்டு மாதம் ரூ. 12 லட்சம் சம்பாதித்து வந்த நிலையில், தற்போது காவல்துறையில் சிக்கியுள்ளார்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் விஷ்ணுப்ரியா. இவர் மாதம் 390 ரூபாய் செலுத்தி தன்னை Subscribe செய்யும் பயனாளிகளுக்கு அரை நிர்வாண வீடியோக்களை பதிவிட்டு எல்லை மீறி வந்துள்ளார்.
இவர் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி, பிக் பாஸ் உள்ளிட்ட ஷோக்களில் பங்கேற்றுள்ளார். அத்துடன், மாடலிங் துறையிலும் அதீத நாட்டம் கொண்டவர். அதில் சில திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்துள்ளது.
மறுபுறம் இவர் இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்களில் தனது மாடலிங் போட்டோக்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிட்டு வந்தார். அதில் விஷ்ணுப்ரியாவால் ஈர்க்கப்பட்டு 1.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் இன்ஸ்டாவில் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.
அதன் மூலம் அவருக்கு வருமானம் கிடைத்துள்ள நிலையில் நாளடைவில், அதிக பணம் வர வர, விஷ்ணுப்ரியா தன்னை முழு நேர இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சராகவே மாற்றிக்கொண்டார்.
அதன் மூலம் விளம்பரம் மற்றும் புரோமோஷன் வேலைகளிலும் ஈடுபட்டு வருமானம் ஈட்டியுள்ளார். இந்நிலையில், இன்ஸ்டா தனது ப்ளூ டிக் யூசர்களுக்காக Users Subscribe என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. தனது பயனாளிகளும் இதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ளலாம்.
அதாவது இன்ஸ்டா யூசர்கள், தங்கள் ஐடியில் Subscribe என்ற ஒரு ஆப்ஷனை எனேபிள் செய்தால், அவர்கள் பதிவிடும் ஸ்பெஷல் போஸ்டுகள், Subscribe செய்த பயனர்களால் மட்டுமே பார்க்க முடியும். அதற்கு மாதம் மாதம் சந்தா வசூலிக்கப்படும். அப்படியொரு சந்தா முறையை எனேபிள் செய்த விஷ்ணுப்ரியா, மாதம் ரூ.390 ரூபாய் வசூலிக்கிறார்.
அதனபடி, 03 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விஷ்ணுப்ரியாவை Subscribe செய்து வைத்துள்ளனர். அதன் மூலம் மாதம் 12 லட்சம் ரூபாயை இவர் லாபமாக சம்பாதிக்கிறார்.
அதாவது, அரைகுறை ஆடைகளுடன் அருவருக்கத்தக்க வகையில் வீடியோக்களை பதிவிடுவதாகவும், நைட் லைவ் என்ற பெயரில் ஆபாச வீடியோக்களை அப்லோட் செய்து தவறான பாதைக்கு வழிவகுக்கும் வகையில் எல்லை மீறும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக விஷ்ணுப்ரியாவிற்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.
மாதம் 390 ரூபாயைப் செலுத்தி, பலரும் இவரை Subscribe செய்து வைத்துள்ளனர். பயனர்களை ஈர்த்து, சந்தா அடிப்படையிலான லாபம் ஈட்டி பலரது வாழ்க்கையையும் சீரழிப்பதாக விஷ்ணுப்ரியாவிற்கு எதிராக அகில இந்திய மாணவர் சங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
அதாவது, இளைய சமூகத்தினரை சீரழிக்கும் விதமாக இவரது போஸ்ட்கள் இருப்பதாகவும் புகாரில் குற்றம் சாட்டியுள்ளனர். அப்புகாரைப் பெற்றுக்கொண்ட விஜயவாடா சைபர் குற்றப்பிரிவு போலீசார், இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர் விஷ்ணுப்ரியா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
English Summary
Vishnu Priya lands in police custody after earning a monthly income of 12 lakhs by posting semi nude videos for subscribers paying rs390