விஜய், சூர்யா,தனுஷ் பட வாய்ப்புகள்...! மமிதா பைஜுவின் சம்பளம் ஆகாயம் தொட்டது...!
Vijay Suriya Dhanush film opportunities Mamita Baiju salary reached sky
பிரேமலு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வசீகரித்து, குறுகிய காலத்திலேயே கவனத்தை குவித்தவர் நடிகை மமிதா பைஜு. தமிழிலும் தனது தடத்தை பதிக்க தொடங்கிய அவர், ரெபல் மற்றும் டியூட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக “கருத்த மச்சான்...” பாடலில் அவர் வெளிப்படுத்திய ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி, இளைஞர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

தற்போது, நடிகர் விஜய் உடன் ஜனநாயகன் படத்தில் தனது கதாபாத்திரத்தை நிறைவு செய்துள்ள மமிதா பைஜு, அடுத்த கட்டமாக சூர்யா நடிக்கும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, தனுஷ் உடன் “கர” திரைப்படத்திலும், விஷ்ணு விஷால் இணையும் “இரண்டு வானம்” படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு தொடர் வாய்ப்புகளால் பிஸியாக இருக்கும் நிலையில், தனது மார்க்கெட் மதிப்பையும் உயர்த்திக் கொண்ட மமிதா பைஜு, இதுவரை ரூ.1½ கோடி பெற்றிருந்த சம்பளத்தை தற்போது ரூ.2 கோடியாக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சூர்யா படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு தனது சம்பளத்தை இன்னும் உயர்த்தும் திட்டத்திலும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், ராங்கி, தக்ஸ், வித் லவ் போன்ற படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த நடிகை அனஸ்வரா ராஜன் கூட, தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர் ரூ.80 லட்சம் வரை சம்பளம் நிர்ணயித்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இளம் நடிகைகளின் இந்த சம்பள உயர்வு, அவர்களின் வளர்ந்து வரும் வரவேற்பையும், சந்தை மதிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சுட்டிக்காட்டாக பார்க்கப்படுகிறது.
English Summary
Vijay Suriya Dhanush film opportunities Mamita Baiju salary reached sky