சிங்கப்பூரிலிருந்து வந்த கணவர்... வீட்டுக்குள் தவெக நிர்வாகியுடன் இருந்த மனைவி...! - வெளியே பூட்டி அதிரடி காட்டிய நபர்...! - Seithipunal
Seithipunal


சென்னையில் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய கணவர், தனது மனைவியுடன் தவெக நிர்வாகி ஒருவர் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இருவரையும் வீட்டுக்குள் வைத்து வெளிப்புறமாகப் பூட்டிய கணவர், காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வரும் மகேந்திரன், வேலை நிமித்தமாக சிங்கப்பூரில் இருந்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது மனைவியும் தவெக மகளிர் அணியைச் சேர்ந்தவருமான சித்ரைச்செல்வியுடன், தவெக நிர்வாகி முகேஷ் வீட்டில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகேந்திரன், வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு காவலர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், வீட்டின் கதவைத் திறந்தனர்.

இதையடுத்து, வீட்டுக்குள் இருந்த சித்ரைச்செல்வியும் முகேஷும் வெளியே வந்தனர். அப்போது, மகேந்திரன் நடந்த சம்பவத்தைத் தனது கைப்பேசியில் காணொலியாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, முகேஷை வாகனத்தில் ஏற்றிய காவலர்கள், அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

husband who came from Singapore wife who administrator inside house person who locked himself outside and showed off


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->