கூட்டணி இல்லை... தனித்து போட்டி...! - தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் புதிய தலைவர்களை உருவாக்க அண்ணாமலை திட்டம்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு தனித்துக் களமிறங்கும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அமைப்பு தேர்தலில் போட்டியிடும் என ஏற்கெனவே தெரிவித்திருந்த அவர், தற்போது கூட்டணியின்றித் தனித்துப் போட்டியிடும் முடிவையும் உறுதிப்படுத்தியுள்ளார்.மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, கடந்த தேர்தலின்போது மன்னார்குடி மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மேற்கொண்ட பிரசார அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.

அப்போது, வெற்றி பெற்ற பிறகு கட்சி மாறியதாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளையும் விமர்சித்தார்.இதுகுறித்து அவர் பேசியதாவது,“இதே மன்னார்குடிக்கு வந்து தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெறுவதற்காகப் பிரசாரம் செய்தேன். அதேபோல் தாராபுரத்துக்கும் சென்று வீதி வீதியாக வாக்கு சேகரித்தேன். மக்களின் காலில் விழுந்து வணங்கி வாக்குக் கேட்டேன்.ஆனால், வெற்றி பெற்ற பிறகு அந்தச் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் முன்பு இருந்த கட்சியிலேயே இல்லை.

இந்தத் தொகுதியில் டி.ஆர்.பி. ராஜா, அடுத்த 100 ஆண்டுகளுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார் என்றும், இது முன்பே தெரிந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் கையில் இருக்கும் வாக்குப்பதிவு மை காய்வதற்குள் கட்சி மாறிவிடும் அரசியல் நடைமுறை நிலவுகிறது.

இதுபோன்ற அரசியலை மாற்ற வேண்டும்.இத்தகைய அரசியலுக்குள் நாமும் சென்றுவிடக் கூடாது. இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையே தலைவர்கள் முதன்மையான பணியாகக் கருத வேண்டும்.ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்துவது, மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரிப்பது, இயற்கை வளங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது போன்ற பணிகளில் தலைவர்கள் ஈடுபட வேண்டும்.

மக்களோடு மக்களாக இணைந்து, அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும்.இந்த ஒற்றைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் சமூகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களுக்காகச் செயல்படும் இதுபோன்ற ஓர் அரசியல் அமைப்பைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தோம் என்று மக்கள் நினைக்கும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும். இதற்காகவே உள்ளாட்சித் தேர்தலில் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு போட்டியிடுகிறது” என்று அண்ணாமலை தெரிவித்தார்.‘வி த லீடர்ஸ்’ அமைப்பு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அந்த அமைப்பு தனித்துப் போட்டியிடுமா அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்தச் சூழலில், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுவோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலைத் தனித்துச் சந்திக்கும் தனது நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No alliance compete alone Annamalai plan to create new leaders all 234 constituencies Tamil Nadu


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->