நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் சோகம்...! பணிகளை முடித்தபோது உதவி ஆணையாளர் மயங்கி விழுந்து மரணம்...! - Seithipunal
Seithipunal


நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வழக்கம்போல் பணிகளை மேற்கொண்டிருந்த உதவி ஆணையாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த பாலசுந்தரம் (51), நெல்லை மாநகராட்சியில் கணக்குப் பிரிவின் உதவி ஆணையாளராகப் பணியாற்றி வந்தார்.

அவர் தினமும் தனது சொந்த ஊரான தூத்துக்குடியிலிருந்து காரில் நெல்லைக்கு வந்து பணிகளை முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவது வழக்கம்.அந்த வகையில், நேற்று காலையிலும் வழக்கம்போல் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த பாலசுந்தரம், இரண்டாவது மாடியில் அமைந்துள்ள தனது அறையில் அமர்ந்து பணிகளை கவனித்து வந்தார்.

அப்போது, ஒப்பந்ததாரர் மற்றும் அலுவலக ஊழியர்களுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார்.இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் பாலசுந்தரம் திடீரென மயங்கி விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக மாநகராட்சி ஆணையாளருக்குத் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு பாலசுந்தரத்தைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.பணியில் இருந்த உதவி ஆணையாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudden tragedy at Nellai Municipal Corporation office While completing work Assistant Commissioner fainted and died


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->