மளிகைக் கடைக்கு ஒருமுறை போய்ப் பாருங்கள்...! விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்...!
Go grocery store once MK Stalin harshly criticizes Chief Minister Vijay over price hike
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பலகாரங்கள் தயாரிப்பதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பருப்பு வகைகள் கிலோவுக்கு ரூ.30 வரையும், கொண்டைக்கடலை ரூ.50 வரையும் விலை அதிகரித்துள்ளன. அரிசியின் விலையும் ஏறுமுகத்தில் இருப்பதால், பண்டிகைக்கான உணவுப் பொருட்களை வாங்குவதற்கே கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தீபாவளியன்று புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, விதவிதமான இனிப்புகளையும் கார வகைகளையும் தயாரித்து உறவினர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது வழக்கம். இதற்காகப் பொதுமக்கள் இப்போதே பலகாரங்கள் தயாரிப்பதற்கான பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு அவர்களுக்குக் கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

இதற்கிடையே, ஆயுதபூஜையையொட்டி சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கப் பயன்படும் வெல்லம், சுண்டல் செய்வதற்குத் தேவையான கொண்டைக்கடலை ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கொண்டைக்கடலை கிலோவுக்கு ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது.அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு வரத்து குறைவு, பருவநிலை மாற்றம், தேவை அதிகரிப்பு போன்ற காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இதற்கிடையே, விலைவாசி உயர்வைக் குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"முதல்-அமைச்சர் விஜய் லண்டனுக்குச் செல்கிறார், கர்நாடகாவுக்குச் செல்கிறார், ஆந்திராவுக்குச் செல்கிறார். போகட்டும்.
அப்படியே உள்ளூரில் இருக்கும் மளிகைக் கடைக்கும் ஒருமுறை சென்று, அங்கு பொருட்களின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.தயவுசெய்து, இதுபற்றி உணவுத்துறை அமைச்சரிடம் மட்டும் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாமே ‘இயல்பாகத்தான் இருக்கிறது’ என்று சொல்லிவிடுவார்.
பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய மக்கள், விலைவாசி உயர்வைக் கண்டு அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள். அவர்களிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Go grocery store once MK Stalin harshly criticizes Chief Minister Vijay over price hike