நடப்பாண்டில் இதுவரை 23,241 பேருக்கு டெங்கு பாதிப்பு...! பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை...! - அமைச்சர் அருண்ராஜ் பேட்டி - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், நோய் பாதிப்பு கட்டுப்பாட்டில் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாநிலத்தில் டெங்கு பாதிப்பு நிலவரம், காய்ச்சல் தடுப்புப் பணிகள் மற்றும் செவிலியர்கள் நியமனம் குறித்து விளக்கமளித்தார்.தமிழகத்தில் கடந்த 2025-ம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் 25,585 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

நடப்பாண்டில் இதுவரை 23,241 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று முன்தினம் 118 பேருக்கு டெங்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இருப்பினும், மாநிலத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும், காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில், கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், காய்ச்சல் தடுப்பு முகாம்கள் வாயிலாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் போதிய அளவில் இருப்பில் உள்ளன.

எனவே, டெங்கு பாதிப்பு குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அரசு மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 4,724 செவிலியர்கள் வெளிப்படைத்தன்மையுடன் நியமிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

So far this year 23241 people infected dengue public need not panic Interview Minister Arunraj


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->