'ஏவுகணை நாயகன்' அப்துல் கலாம் பிறந்தநாள்...! நாட்டுக்காக ஆற்றிய அரும்பணிகளைப் போற்றி வணங்கிய முதலமைச்சர்...! - Seithipunal
Seithipunal


அறிவியல் துறையில் இந்தியாவை உலக அரங்கில் உயர்த்தியதோடு, இளைய தலைமுறையினரின் மனங்களில் நம்பிக்கையையும் சாதனை வேட்கையையும் விதைத்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று நினைவுகூரப்படுகிறது. அவரது தொலைநோக்குச் சிந்தனைகள், எளிமையான வாழ்க்கை, மாணவர்களிடம் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடு ஆகியவற்றைப் போற்றும் வகையில், முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, அவர்களின் இலட்சியங்களை நோக்கிய பயணத்துக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தவர்.

‘ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படும் அவரது பிறந்தநாளில், நாட்டுக்காக அவர் ஆற்றிய அரும்பணிகளை நன்றியுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானியாகவும், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும், நாட்டின் குடியரசுத் தலைவராகவும் உயரிய பொறுப்புகளை வகித்தவர் அப்துல் கலாம்.

இத்தனை பெருமைகளுக்குச் சொந்தக்காரராக இருந்தபோதிலும், ‘ஆசிரியர்’ என்ற அடையாளத்தையே தனது வாழ்வின் மிகப்பெரிய பெருமையாகக் கருதினார்.மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் வளர்ப்பதில் இறுதிவரை ஆர்வம் காட்டிய அவர், இளைய தலைமுறையின் முன்னேற்றத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்தார்.

அவரது எளிமை, நேர்மை, அறிவியல் மீதான ஈடுபாடு ஆகியவை காலத்தால் அழியாத முன்மாதிரிகளாகத் திகழ்கின்றன.அப்துல் கலாம் முன்வைத்த உயரிய சிந்தனைகளையும் தொலைநோக்குப் பார்வையையும் நம் வாழ்வில் வழிகாட்டியாகக் கொண்டு, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்” என்று முதலமைச்சர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Missile Man Abdul Kalam birthday Chief Minister praised and paid tribute to his great work country


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->