விதிமீறி பட்டாசு தயாரிப்பு...! தென்காசி அருகே பரபரப்பு சோதனை, ஆலைக்கு முத்திரையிட்ட வருவாய்த்துறை...! - Seithipunal
Seithipunal


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உரிய அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்ட ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், விதிமீறி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், வெடிமருந்துகள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக ஆலை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டதுடன், அந்த ஆலைக்கும் அதிகாரிகள் முத்திரையிட்டு மூடினர்.தென்காசி மாவட்டம் திருவேங்கடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

தீபாவளி நெருங்குவதால், இங்குள்ள ஆலைகளில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்தச் சூழலில், அப்பகுதியில் சில இடங்களில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக திருவேங்கடம் வருவாய்த்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை திருவேங்கடம் அருகே குளக்கட்டாகுறிச்சி ஸ்ரீ ரங்கராஜபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, பட்டாசுகளுக்குத் தேவையான திரிகள் தயாரிப்பதற்கும், பட்டாசுக் குழாய்களில் மண் அடைப்பதற்கும் மட்டுமே அனுமதி பெற்றிருந்த நிலையில், அங்கு விதிமுறைகளை மீறி வண்ண அலங்காரப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.இதையடுத்து, ஆலையில் இருந்த ஏராளமான பட்டாசுகள், பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெடிமருந்துகள் மற்றும் பட்டாசு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக திருவேங்கடம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ஆலை உரிமையாளரான குளக்கட்டாகுறிச்சியைச் சேர்ந்த கருப்பையா பாண்டியனின் மகன் பாலசுப்பிரமணியன் (65), சிவகாசி மாவட்டம் சிவல்பட்டியைச் சேர்ந்த ஜெய்சங்கரின் மகன் சிவா (35), குளக்கட்டாகுறிச்சியைச் சேர்ந்த வீரய்யாவின் மகன் அம்புராஜ் (52) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.மேலும், விதிமீறி பட்டாசுகள் தயாரிக்கப்பட்ட ஆலையை அதிகாரிகள் மூடி முத்திரையிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Illegal fireworks production Sensational raid near Tenkasi Revenue Department seals factory


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->