உடன்குடி பஜாரில் கையில் அரிவாளுடன் சுற்றிய வாலிபர்கள்...! - மக்களிடையே அலறல்... 3 பேரை மடக்கிப் பிடித்த காவல்துறை...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஜார் பகுதியில், கையில் அரிவாள்களுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதாக 3 வாலிபர்களைக் குலசேகரன்பட்டினம் காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.உடன்குடி பஜார் பகுதியில் நேற்று இரவு குலசேகரன்பட்டினம் காவலர்கள் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு 3 வாலிபர்கள் அரிவாள்களுடன் சுற்றித்திரிவதைக் கவனித்தனர். அவர்களின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்குப் பாதிப்பு உண்டாக்கும் வகையிலும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, உடனடியாகச் செயல்பட்ட காவலர்கள் மூவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.காவலர்கள் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீராமின் மகன் சக்திவேல் (19), உடன்குடி புதுமனை பகுதியைச் சேர்ந்த ராபின்சன் (22), மரியம்மாள்புரத்தைச் சேர்ந்த சாந்தகுமார் (19) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த குலசேகரன்பட்டினம் காவலர்கள் அவர்களைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர்.

பொதுமக்கள் அதிகம் நடமாடும் பஜார் பகுதியில் அரிவாள்களுடன் வாலிபர்கள் சுற்றித்திரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youths walking around Udangudi Bazaar with sickles in their hands Screams among people Police caught 3 people


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->