அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: விமானியின் தவறா? சர்வதேச ஊடகங்களின் பகீர் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு!
The Ahmedabad Crash Mystery Pilot Error or Media Speculation
2025 ஜூன் 12-ல் அகமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி அருகே விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரம் குறித்து இத்தாலியின் ‘கோரியர் டெல்லா செரா’ மற்றும் அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ ஆகிய நாளிதழ்கள் தற்போது வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமல்ல, கேப்டன் சுமீத் சபர்வால் எரிபொருள் செல்லும் சுவிட்சை வேண்டுமென்றே அணைத்ததே விபத்துக்குக் காரணம் என அந்த அறிக்கைகள் கூறுகின்றன. எரிபொருள் சுவிட்ச் தானாக அணைய வாய்ப்பே இல்லை என அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும், விபத்திற்குச் சில நொடிகள் முன் இதுகுறித்துக் கேட்ட துணை விமானிக்கு, கேப்டன் எந்தப் பதிலும் அளிக்காமல் மௌனம் காத்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்துள்ளது. இவை வெறும் ஊகங்கள் என்றும், அதிகாரப்பூர்வ விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 260 உயிர்களைப் பறித்த இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளது திட்டமிட்ட செயலா அல்லது தொழில்நுட்பச் சிக்கலா என்ற விவாதம் தற்போது உலகளவில் சூடுபிடித்துள்ளது.
English Summary
The Ahmedabad Crash Mystery Pilot Error or Media Speculation