விஜய் சேதுபதி 51: "ஏஸ்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு..?
Vijay Sethupathi 51 Ace movie trailer release date
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்'. கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில், 05 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு 'ஏஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து அணைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி நடித்திருக்கின்ற இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.
விஜய் சேதுபதியின் 51-வது படமான 'ஏஸ்' இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், 'ஏஸ்' படம் வரும் மே 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வரும் 11-ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
Vijay Sethupathi 51 Ace movie trailer release date