ஸ்ரீனிவாசனுக்கு இறுதி அஞ்சலி...! நடிகர் சூர்யா நேரில் மரியாதை...!
Final respects paid Srinivasan Actor Suriya paid his respects person
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த மூத்த மலையாள திரையுலக கலைஞர் ஸ்ரீனிவாசன் (69) காலமானார். கடந்த 48 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் தனித்துவமான அடையாளத்துடன் பயணித்த அவர், நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் என பல முகங்களில் தன்னை நிரூபித்தவர்.

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம்பிடித்த ஸ்ரீனிவாசன், சமீப நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் காலமானார்.அவரது மறைவு மலையாள திரையுலகில் ஆழ்ந்த சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பிரபலங்கள், சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் உருக்கமான இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நடிகர் சூர்யா நேரில் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
மறைந்த நடிகர் ஸ்ரீனிவாசனின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. மலையாள சினிமா ஒரு காலத்தைக் கடந்த கலைஞரை இழந்துள்ளது.
English Summary
Final respects paid Srinivasan Actor Suriya paid his respects person