வச்சி செய்த சஞ்சு சாம்சன், அக்சர் படேல் அபாரம்: பெத்தேல் சதம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா..! - Seithipunal
Seithipunal


10 வது டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பல பரீட்சை நடத்தின. ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 07 விக்கெட்டுக்கு 253 ரன்கள் அடித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இன்று சொதப்பிய நிலையில், 09 ரன்களில் ஆட்டமிழந்தார். 

மறுபக்கம் சஞ்சு சாம்சன் 42 பந்தில் 07 சிக்சர், 08 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 39 ரன்களிலும், கேப்டன் சூரியகுமார் 11 ரன்களிலும், ஷிவம் துபே 43 ரன்களிலும், ஹர்டிக் பாண்டியா 27 ரன்களிலும், திலக் வர்மா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து சார்பில் வில் ஜாக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஜோப்ரா ஆச்சர் 1 விக்கெட்டினையும் 02 ரன் அவுட்டினையும் செய்தனர். இறுதியில் இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில், 07 விக்கெட்டுகள் இழப்பில் 253 ரன்களை எடுத்தது.

இதையடுத்து, 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சால்ட் , பட்லர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அணியின் கேப்டன் ப்ரூக் 07 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஆரம்பம் முதலே பெத்தேல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி இந்தி அணியை கதிகலங்க வைத்தார்.  வில் ஜாக்ஸ் 35 ரன்னும், ஜாஸ் பட்லர் 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

பெத்தேல் சதமடித்து 105 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இருமுனை கத்தையாக இருந்த போட்டியில் 18 வது ஓவரில் பும்ராவின் அபாரமான பந்து வீச்சில் 06 ரன்கள் மாத்திரம் கொடுக்கப்பட்டமை இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இறுதியில், இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 07 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் 07 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றதோடு, இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. அதன்படி, வரும் 08-ஆம் தேதி நியூசிலாந்தை அஹமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வைத்து எதிர்கொள்ளவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India defeated England and advanced to the final with Sanju Samsons action


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->