நெல்லையில் பரபரப்பு...! இனி வெளியே வர முடியாது...! - கஞ்சா விற்ற வாலிபர் மீது தடுப்புக் காவல் சட்டம்...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் பாணான்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜின் மகன் வானுமாமலை (27), சட்டவிரோத கஞ்சா விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மூன்றடைப்பு காவல்துறை இன்ஸ்பெக்டர் சபிதா, அந்த நபரின் செயல்பாடுகள் தொடர்ந்து சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார்.

அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் அளித்த பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்படி, வானுமாமலை தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தவும், குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 47 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There commotion paddy field I cant come out anymore Detention Act youth who sold ganja


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->