சட்டவிரோத மது விற்பனை...! 562 மது பாட்டில்கள், பைக் பறிமுதல்...! - பைக்கில் சப்ளை செய்தவர் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் மீகா தலைமையிலான காவலர்கள், நேற்று கயத்தாறு-அய்யனார் ஊத்து பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ஒருவரை கண்காணித்து பிடித்த காவலர்கள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், அவர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ராஜா (35) என்பதும், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, காவலர்கள் ராஜாவை கைது செய்து, அவரிடம் இருந்த 562 மது பாட்டில்கள், ரூ.1,600 ரொக்கப் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணையை விரிவுபடுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Illegal sale liquor 562 liquor bottles bike seized Man who supplied liquor bike arrested action


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->