விஜயால் ஆட்டம் காணும் ஓட்டு வங்கி...? திமுக-அதிமுக எதிர்ப்பு வாக்குகளை தட்டித் தூக்குகிறாரா விஜய்...? - திருமாவளவன் ஓபன் டாக் - Seithipunal
Seithipunal


பெரும் எதிர்பார்ப்புகளும் அரசியல் சூடுபிடிப்பும் நிறைந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் நான்கு முனைப்போட்டி உருவாகி அரசியல் களம் கடும் போட்டியால் குலுங்கியது. முக்கிய அரசியல் அணிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தங்களது கூட்டணிகளுடன் களமிறங்க, த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு வாக்காளர்களை கவர முயன்றன.

இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைத்தது. வருகிற 4-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஓட்டுப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கின. பெரும்பாலான கணிப்புகள் தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றன.

சில கணிப்புகள் அ.தி.மு.க. மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சியை கைப்பற்றும் எனவும், ஒரே ஒரு கணிப்பு த.வெ.க. ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த முரண்பட்ட கணிப்புகள் மக்களிடையே அதிக ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார் என்ற கேள்வி பொதுமக்களின் மனதில் பெரிதும் எழுந்துள்ளது. இதற்கான தீர்வு இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது.இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள காணொளி அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், விசிக போட்டியிடாத தொகுதிகளில் சில இடங்களில் கூட்டணிக்கான ஒத்துழைப்பு குறைவாக இருந்ததாகவும், சில பகுதிகளில் கட்சியினரின் பணிகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையெனவும் புகார்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்காதவர்களை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எந்த கணக்கில் பார்த்தாலும் தி.மு.க. கூட்டணியே பெரும் வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரித்திருக்கிறார் என்றும், ஆனால் தனித்த அரசியல் சக்தியாக ஆட்சியை கைப்பற்றும் வலிமையை பெறுவது கடினம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், தி.மு.க. ஆட்சியை நீக்கி, பா.ஜ.க. இணைந்த அ.தி.மு.க. ஆட்சி அமைந்தாலும் விஜய்க்கு அதில் பெரிய கவலை இல்லை என்றும், பா.ஜ.க.-வை கொள்கை ரீதியாக எதிர்ப்பதாக கூறுவதைத் தவிர வேறு நிலைப்பாடு தெரிவிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay vote bank turmoil Is Vijay poaching anti DMK AIADMK votes Thirumavalavan Open Talk


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->