உங்கள் போன் திடீரென அலறினாலும் பயப்பட வேண்டாம்...! இன்று நடப்பது என்ன? - மத்திய அரசின் அதிரடி சோதனை...!
Dont panic if your phone suddenly rings What happening today Central government surprise inspection
மழை வெள்ளம், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் சூழ்நிலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசு “செல் பிராட்காஸ்ட் அலெர்ட்” என்ற நவீன எச்சரிக்கை தகவல் பரிமாற்ற முறையை உருவாக்கியுள்ளது.
இந்த அமைப்பின் செயல்திறனை பரிசோதிக்கும் வகையில், சோதனை குறுஞ்செய்திகள் அனுப்பும் முயற்சி இன்று தொடங்கவுள்ளதால், அவற்றை கண்டு பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து இந்த முக்கியமான சோதனை நடவடிக்கையை மேற்கொள்கின்றன.

“செல் பிராட்காஸ்டிங்” எனப்படும் இந்த முன்னேற்றமான தொழில்நுட்பம், சாதாரண குறுஞ்செய்தி முறைபோல் தனிப்பட்டவர்களுக்கு அல்லாமல், குறிப்பிட்ட செல்போன் கோபுர வரம்புக்குள் உள்ள அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் ஒரே நேரத்தில் தகவலை அனுப்பும் திறனை கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கை முறையின் சிறப்பம்சமாக, அலைபேசி ‘சைலண்ட்’ நிலையில் இருந்தாலும் கூட, கூர்மையான எச்சரிக்கை ஒலியுடன் செய்தி திரையில் வெளிப்படும். இதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களும், கவனக்குறைவாக இருப்பவர்களும் உடனடியாக விழிப்புணர்வு பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இன்று குறிப்பிட்ட நேரத்தில் நாடு முழுவதும் பெரும்பாலான செல்போன்களுக்கு இந்த சோதனை எச்சரிக்கை அனுப்பப்பட உள்ளது. அந்த தகவலில் இது ஒரு மாதிரி சோதனை மட்டுமே என்பதும், பொதுமக்கள் எந்தவித பயமும் கொள்ள வேண்டாம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த செய்தியை பெற்ற பயனர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை; ‘புறக்கணிக்கவும்’ என்ற தேர்வை அழுத்துவது போதுமானது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசரநிலை எச்சரிக்கை அமைப்பின் செயல்திறனை பரிசோதித்து, தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்யும் நோக்கில் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
மத்திய தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் உருவாக்கிய “சசேத்” என்ற ஒருங்கிணைந்த எச்சரிக்கை தகவல் அமைப்பு மூலம் இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்த புதிய தொழில்நுட்பம், இந்தியாவின் டிஜிட்டல் பாதுகாப்பு முயற்சிகளில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
English Summary
Dont panic if your phone suddenly rings What happening today Central government surprise inspection