விஜய் பட பாடலை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இளையராஜா; தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் அந்த பாடலை வெளியிட காரணம் என்ன..?
Ilaiyaraaja releases a song from a Vijay film on his YouTube channel
'இசைஞானி' இளையராஜா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் விஜய் பட பாடலை வெளியிட்டுள்ளார். இருப்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 'சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு' என தொடங்கும் இந்த பாடலை இளையராஜா தேர்தல்கள் முடிவு வரும் நிலையில், வெளியிட்டு இருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் திங்களன்று (மே 04) அன்று வெளிவரவுள்ளது. இந்நிலையில், இளையராஜா வெளியிட்டுள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான வியூசை கடந்து லைக்ஸை குவித்துள்ள இந்த பாடலின் கமெண்ட் பகுதியில் ஏராளமான தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் அதிக அளவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
1998 ஆம் ஆண்டு வெளியான 'இது எங்கள் நீதி' படத்தில் இடம்பெற்றுள்ள 'சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு' என்ற பாடல் தற்போது வைரலாகியுள்ளது. இந்த படம் விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியது. இதில்,விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
English Summary
Ilaiyaraaja releases a song from a Vijay film on his YouTube channel