கே.எல் ராகுல் - பதும் நிசங்வின் அபாரம்; ராஜஸ்தான் அணியை 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய டெல்லி அணி..! - Seithipunal
Seithipunal


19-வது ஐபிஎல் தொடரின் 43 வது போட்டியில் இன்று ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

இன்றைய போட்டியில், டெல்லி அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கம்பேக் கொடுத்துள்ளார். ராஜஸ்தான் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக  களமிறங்கினர். இதில் முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பிய ஜெய்ஸ்வால், 03வது பந்திலேயே அவருடைய விக்கெட்டை ஸ்டார்க் வீழ்த்தினார். மறுபுறம் இருந்த சூர்யவன்ஷி 04 ரன்களில் ஜேமிசன் பந்து வீச்சில் 04 ரன்னுக்கு போல்டாகி வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் ரியான் பராக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்தில் 08 பவுண்டரிகள் 05 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துருவ் ஜுரெல் 42 ரன்கள் அடித்து வெளியேற, கடைசியாக வந்து நாலாபுறமும் 6 சிக்சர்களை பறக்கவிட்ட டொனவன் ஃபெரிரா வெறும் 14 பந்தில் 47 ரன்களை விளாசினார். இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் ராஜஸ்தான் அணி 225 ரன்களை குவித்தது.

டெல்லி அணி சார்பில் மிட்சல் ஸ்டார்க் 03 விக்கெட்டுகளையும், ஜேமிசன், அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

226 என்ற வெற்றி இலக்கை களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி தொடக்கம் முதலே அபாரமாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பதும் நிசங்க 33 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய கே.எல். ராகுல் 40 பந்துகளில் 75ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த நிதிஷ் ராணா வெறும் 17 பந்துகளில் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஸ்டப் 18 ரன்களிலும், அசுதோஷ் சர்மா 25 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்து, 19.1 ஓவரில் 05 பந்துகள் மீதமிருக்க 07 விக்கெட்டுகள் வித்தியாத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி  டெல்லி அணி வெற்றிப்பெற்றுள்ளது.

ராஜஸ்தான் அணி சார்பில் ஜடேஜா, ஆச்சர், துஷார் தேஸ்பாண்டே தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi Defeats Rajasthan by 7 Wickets


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->