'பெரிய இயக்கத்திற்கெல்லாம் போட்டியாக நிற்கிறார்; சினிமாவில் இருந்தால் கூட்டம் மட்டும் சேராது. அர்த்தத்துடன் கூட்டம் சேரும்'; விஜய் குறித்து மறைமுகமாக பேசிய நடிகர் ராதாரவி..! - Seithipunal
Seithipunal


நடிகர் ராதாரவி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குறித்து  மறைமுகமாக பேசியுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த 23-ஆம் தேதி, தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. வரும் 04-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முதல்முறையாக போட்டியிட்டுள்ளது.

தவெக கட்சிக்கு இந்த தேர்தலில், கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்றும், தேர்தலில் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் அமையும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் குறித்து சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராதாரவி பேசியதாவது; ''சினிமாவில் இருந்த ஒரு சகோதரர் இன்றைக்கு பெரிய இயக்கத்திற்கெல்லாம் போட்டியாக நிற்கிறார்.

அந்த வகையில் நாம் சினிமாவை பெருமையாக நினைக்க வேண்டும். அவரை எதிர்த்து நிற்பவர்களும் திரை துறையை சேர்ந்தவர்கள்தான்.

ஆனால் சினிமாவை பொருத்தவரை எந்த நேரத்தில் என்ன ஆகும் என்று சொல்ல முடியாது. இப்போது நான் பேசிக் கொண்டிருக்கிறேன். கீழே இறங்கி செல்லும் போது நான் தலைவனாகலாம். அதற்காக ஏன் தலைவன் ஆனீர்கள் என்று கேட்க முடியாது.

ஏனென்றால் சினிமா அப்படியானது. சினிமாவில் இருந்தால் கூட்டம் மட்டும் சேராது. அர்த்தத்துடன் கூட்டம் சேரும் என்று தெரிவித்துள்ளார்.'' தற்போது இந்த வீடியோ வைரழகையுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Radha Ravi spoke indirectly about Vijay remarking that he stands as a rival to even major movements


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->