தமிழகத்தில் 121 வரை தொகுதிகளை தவெக கைப்பற்றும்; 41% வாக்குகள்; முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் கருத்துக்கணிப்பு..!
Former IPS officer Ravi predicts that the TVK will capture up to 121 constituencies in Tamil Nadu
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் 29 ஆம் தேதி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு, 118 இடங்களை தேவை. அதன்படி, பல்வேறு கருத்துக்கணிப்புகளும் (பிரஜா போல்ஸ், பீப்பிள்ஸ் இன்சைட், ரிபப்ளிக் - பி மார்க், மேட்ரிஸ், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்) திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளன.
'ஜேவிசி டைம்ஸ் நவ்' அதிமுக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளது. சற்று தாமதமாக தனது கருத்துக்கணிப்பை வெளியிட்ட 'ஆக்சிஸ் மை இந்தியா', விஜய்யின் தவெக 120 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறு வெவ்வேறு கருத்துக்கணிப்புகளும் மாறிமாறி வெளிவந்துள்ளதால், ஒட்டுமொத்த மக்களும் மே 04-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 10 முன்னாள் காவல்துறையினர் என ஒதுக்கி 2340 பேர் கொண்ட குழு கருத்துக்கணிப்பில் ஈடுபட்டதாகவும்,0 2 லட்சத்து 34 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் இதை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி, முன்னாள் காவல்துறையினர் நடத்திய கருத்துக்கணிப்பின் படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 41% வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும், கிட்டத்தட்ட 121 தொகுதிகளை தவெக கைப்பற்ற வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். தற்போது இவருடைய கருத்துக்கணிப்பு தகவல்கள் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளன.
English Summary
Former IPS officer Ravi predicts that the TVK will capture up to 121 constituencies in Tamil Nadu