விஜய் செயலால் கதறும் ரசிகர்கள்! ஒரே கார்.. ஒரே நிற உடை! மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Same car same color dress Vijay and Trisha came as a couple for the marriage reception
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சங்கீதா, நடிகர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த விவகாரம் சமீப நாட்களில்தான் பொதுமக்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற உள்ளது என்று கூறப்படுகிறது.
சங்கீதா தாக்கல் செய்த மனுவில், நடிகர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், அதை குறித்து கேள்வி எழுப்பியதற்காக தன்னை வீட்டில் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நடிகையின் பெயரை மனுவில் குறிப்பிடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் அந்த நடிகை த்ரிஷா என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
இந்த சூழலில், சென்னை நகரில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் சேர்ந்து கலந்து கொண்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஒரே நிற உடை அணிந்து கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. வெளியான வீடியோவில், முதலில் விஜய் காரிலிருந்து இறங்கியபோது த்ரிஷா அருகில் காத்திருக்கிறார். பின்னர் இருவரும் ஒன்றாக நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேடையில் மணமக்களை வாழ்த்தும் போது இருவரும் அருகருகே நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததாகவும், நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போதும் ஒரே நேரத்தில் வெளியே வந்ததாகவும் அந்த வீடியோவில் காணப்படுகிறது.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், விஜய்–சங்கீதா விவாகரத்து குறித்தும், த்ரிஷாவுடன் தொடர்பு குறித்தும் நடிகர் விஜய் அல்லது அவரது தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Same car same color dress Vijay and Trisha came as a couple for the marriage reception