மதுரையில் சினிமா பாணியில் அரங்கேறிய கொடூரம்...! - பைக்கை காரால் துரத்தி மோதிக் கீழே தள்ளி இளைஞர் வெட்டிக் கொலை...!
brutal incident staged in Madurai cinematic style young man chased by car and hit by bike thrown down and hacked death
மதுரையில் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை காரில் வந்த மர்ம கும்பல் துரத்திச் சென்று, வாகனத்தால் மோதிக் கீழே தள்ளி சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதலில் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இளைஞரான தினேஷ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மதுரை மாவட்டம், விராதனூர் பகுதியில் உள்ள சத்யா நகர் அருகே நேற்று நள்ளிரவு தினேஷ், சந்தோஷ்குமார் ஆகிய இரு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்களைப் பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல், திரைப்படக் காட்சியைப் போன்று வேகமாகத் துரத்தியுள்ளது. தொடர்ந்து, அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது காரை மோதியுள்ளனர். இதில் நிலைதடுமாறிய தினேஷும் சந்தோஷ்குமாரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கீழே விழுந்ததும், காரில் இருந்து இறங்கிய கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவர்களைச் சரமாரியாக வெட்டித் தாக்கியது.
இந்தத் தாக்குதலில் சந்தோஷ்குமார் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மற்றொரு இளைஞரான தினேஷும் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக் கொண்டிருந்தார். பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தினேஷை மீட்டு, சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, உயிரிழந்த சந்தோஷ்குமாரின் உடலைக் கைப்பற்றிய காவலர்கள், உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள், தப்பியோடிய மர்ம கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பின்னால் முன்விரோதம் ஏதேனும் உள்ளதா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களைக் காரில் துரத்தி, மோதிக் கீழே தள்ளி வெட்டிக் கொலை செய்த சம்பவம் மதுரை பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
brutal incident staged in Madurai cinematic style young man chased by car and hit by bike thrown down and hacked death