கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழா; ஒரே காரில், ஒரே கலர் உடையில் ஜோடியாக பங்கேற்ற விஜய் - த்ரிஷா..!
Vijay and Trisha attended the Kalpathi Suresh wedding ceremony as a couple in the same car and wearing the same color dress
AGS குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு விழா மாலை நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் ஒரே காரில், ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்து வந்ததும் இருவரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தமை கவனம் ஈர்த்துள்ளது.


ஏனெனில் கடந்த வாரம் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யிடம் இருந்து விவாகரத்துக்கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதாவது, விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய தகாத உறவில் இருப்பதே இதற்குகாரணம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவாகரம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளான நிலையில், நடிகை த்ரிஷாவுடனான தொடர்புதான் காரணம் என பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. பலரும் விஜய் - திரிஷாவை கடுமையாய் விமர்சித்தும் வருகின்றனர். இருப்பினும் இது குறித்து விஜய் அல்லது த்ரிஷா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இருவரும் ஒன்றாக விழாவில் ஒரே காரில் ஒரே நிற உடையில் வந்து கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Vijay and Trisha attended the Kalpathi Suresh wedding ceremony as a couple in the same car and wearing the same color dress