ஈரானில் இரண்டு பள்ளிகள் மீது மீண்டும் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்; அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்..! - Seithipunal
Seithipunal


அணு ஆயுத போட்டி காரணமாக ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டாக இணைந்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல் குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் இலக்காகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதன் படி, இன்று மதியம், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பரண்ட் (Parand) நகரில் உள்ள இரண்டு பள்ளிகள் மீது அமெரிக்காவின் ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளன. இந்த தாக்குதலில் பள்ளிக் கட்டடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமான புகைப்படங்களை ஈரானின் 'பார்ஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதல் காரணமாக பள்ளிகளுக்கு அருகிலுள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் குறித்த துல்லியமான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

கடந்த சனிக்கிழமை காலை தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது அமெரிக்க- இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் சுமார் 160 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இந்த சோகம் அடங்குவதற்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள ரேடார் மையங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அத்துடன், பாரசீக வளைகுடாவின் வடக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. 

தற்போது இந்தத்கப்பல் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது, நேற்று இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் அமெரிக்காவின் குண்டு தாக்குதலுக்கு இலக்கணத்தில், 87 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US missiles again attack two schools in Iran


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->