முதியவர் செய்த பயங்கரம்! விளையாடச் சென்ற 4 வயது குழந்தையை சடலமாக மீட்ட சோகம்...! - வெளிச்சத்திற்கு வந்த பாலியல் வன்கொடுமை
horror committed by old man tragedy finding body 4 year old child who had gone play harassment that came light
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பஹோர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு 4 வயதான பெண் குழந்தை இருந்தது. நேற்று வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி திடீரென காணாமல் போனது குடும்பத்தினரை பதற்றத்தில் ஆழ்த்தியது.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால், அவர்கள் உடனடியாக காவலர்களிடம் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் சிறுமியை அழைத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த முதியவரை கைப்பற்றி காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில், சிறுமியை மக்கள் நடமாட்டமில்லாத இடத்துக்கு அழைத்து சென்று கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல் காவலர்களை அதிர்ச்சியடையச் செய்தது. உடனடியாக குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பின்னர், சிறுமியின் உடலை மீட்ட காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
English Summary
horror committed by old man tragedy finding body 4 year old child who had gone play harassment that came light