சாக்லேட் பாய் அப்பாஸ் மீண்டும் காதல் தேசத்தில்...? - ஹேப்பி ராஜ் ப்ரோமோ அதிரடி...!
Chocolate Boy Abbas back land romance Happy Raj promo creates sensation
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனித்த அடையாளம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய திரைப்படம், தமிழ் சினிமாவிற்கு புதிய இயக்குநரை அறிமுகப்படுத்துகிறது. ‘லவ் டுடே’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு உதவி இயக்குநராக பணியாற்றிய மரியா ராஜா இளஞ்செழியன், இந்த படத்தின் மூலம் இயக்குநராக தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்க, இசையை ஜஸ்டின் பிரபாகரன் அமைக்கிறார். ‘பியாண்ட் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ‘ஹேப்பி ராஜ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் ப்ரோமோ வீடியோ, ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்து வருகிறது

இந்த ப்ரோமோவின் முக்கிய ஹைலைட் என்றால், 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவுக்கு அளிக்கும் மாபெரும் கம்பேக் தான். புரோமோவில் அவரது தோற்றமும் அறிமுகமும் வெளியாகியதும், சமூக வலைதளங்களில் அது வைரலாகி வருகிறது.
90-களில் தமிழ் இளம்பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்த ‘சாக்லேட் பாய்’ அப்பாஸ், ‘காதல் தேசம்’, ‘VIP’, ‘படையப்பா’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் தனது வசீகரமான தோற்றமும், மயக்கும் புன்னகையும் கொண்டு கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
2014-ல் வெளியான ‘ராமானுஜன்’ படத்திற்கு பிறகு திரையில் காணப்படாத அப்பாஸ், நீண்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஹேப்பி ராஜ்’ மூலம் அந்த நீண்ட இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
English Summary
Chocolate Boy Abbas back land romance Happy Raj promo creates sensation