மதுபோதையில் போட்டோ எடுக்க வந்த ரசிகரை அடித்து அனுப்பிய நடிகை சாய் தன்ஷிகா! கோபத்தில் அடியாட்களுடன் வந்த ‘குடிகார’ ரசிகர்..! - Seithipunal
Seithipunal


கேரளாவில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பு தளத்தில், குடிபோதையில் புகைப்படம் எடுக்க வந்த நபரையும், பின்னர் அவர் அழைத்து வந்த ஏழு பேர் கொண்ட கும்பலையும் நேரடியாக எதிர்கொண்டதாக நடிகை சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்துள்ள யோகி டா திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார். இந்த தகவல் தற்போது திரையுலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ, ஐந்தாம் வேதம் போன்ற படங்களில் தனது வித்தியாசமான கதாபாத்திரங்களாலும், வலுவான நடிப்பாலும் கவனம் ஈர்த்தவர் சாய் தன்ஷிகா. அந்த அனுபவங்களைத் தாண்டி, படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு தொடர்பான ஒரு கடினமான சூழ்நிலையை அவர் நேரடியாக சந்தித்ததாக கூறினார்.

அவர் பேசியதாவது, “கேரளாவில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது, பிரேக் விட்ட சமயத்தில் நான் என் கேரவனுக்குச் சென்றேன். என் உதவியாளரும் உடன் இருந்தார். அப்போது ஒருவர் வந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார். அவர் மது அருந்தியிருந்தார். ‘நீங்கள் குடித்திருக்கிறீர்கள், அதனால் புகைப்படம் எடுக்க முடியாது’ என்று சொன்னேன். அதற்கு அவர் பிரச்சனை செய்தார். வேறு வழியில்லாமல், அவரை அடித்து அங்கிருந்து அனுப்பினேன். அதற்குப் பிறகு அவர் அந்த இடத்தை விட்டு சென்றார். நானும் கேரவனுக்குள் சென்றுவிட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு நடந்த சம்பவம் இன்னும் அதிர்ச்சிகரமாக இருந்ததாக சாய் தன்ஷிகா கூறினார். “சிறிது நேரம் கழித்து நான் வெளியே வந்தபோது, அதே நபர் ஏழு பேருடன் சேர்ந்து வந்தார். அப்போது அங்கே பெரிய சண்டையே நடந்தது. நான் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலைகளை அந்த நேரத்தில் பயன்படுத்தினேன். அது எனக்கு ஒரு பாதுகாப்பு. இறுதியில் இயக்குநரும் ஹீரோவும் வந்து என்னை பிடித்து வைத்தனர். அப்போதும் என் கோபம் முழுமையாக தணியவில்லை. என்னுடன் இருக்கும் ஒருவரை யாராவது தாக்கினால், என்னால் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்று அவர் வெளிப்படையாக கூறினார்.

இந்த சம்பவம், நடிகைகள் மற்றும் பெண்கள் படப்பிடிப்பு தளங்களில் சந்திக்கும் பாதுகாப்பு சவால்கள் குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நடிகை ஒருவர் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பது திரையுலகில் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சாய் தன்ஷிகாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் நடிகர் விஷால் உடன் அவரது திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகள் முடிந்தவுடன் திருமணம் நடைபெறும் என்றும் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது நடிப்பிலும் புரமோஷன்களிலும் பிசியாக இருக்கும் சாய் தன்ஷிகா, ‘யோகி டா’ திரைப்பட வெளியீட்டு பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில் வி. செந்தில்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்கியுள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை இயக்குநரே எழுதியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Sai Dhanshika beats up a fan who came to take a photo while drunk An angry drunk fan came with his henchmen


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->