எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை..என் தாயின் நம்பிக்கையை மதித்தேன் – விமர்சனங்களுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி - Seithipunal
Seithipunal


நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் (86) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மார்ச் 30ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு மார்ச் 31ஆம் தேதி பெங்களூருவில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.

இந்த நிலையில், “நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்” என்று முன்பு கூறியிருந்த பிரகாஷ் ராஜ், தனது தாயாருக்கு கிறிஸ்தவ மரபுப்படி இறுதிச்சடங்கு நடத்தியதை சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வீடியோக்களை பகிர்ந்தனர்.

இதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “ஆம், நான் கடவுளை நம்புவதில்லை. ஆனால் என் தாய் தனது கடவுளை நம்பினார். அவரது நம்பிக்கையின்படி நல்லடக்கம் செய்யப்படும் உரிமையை நான் மறுக்க முடியாது. அதுவே அடிப்படை மனித மரியாதை” என்று விளக்கம் அளித்தார். மேலும், “வெறுப்பை பரப்புபவர்கள் இதை புரிந்துகொள்வார்களா?” எனக் கேள்வியும் எழுப்பினார்.

அதே நேரத்தில், தனது பெயரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து போலியான ட்வீட் பரப்பப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். “ஏப்ரல் ஃபூல்ஸ் தினத்தில் என் பெயரில் போலி ட்வீட்டை உருவாக்கி பரப்பியுள்ளனர்” எனக் கூறிய அவர், இதுபோன்ற தவறான தகவல்களை கடுமையாக கண்டித்தார்.

இந்த துயர நேரத்தில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆதரித்த அனைவருக்கும் பிரகாஷ் ராஜ் நன்றி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I donot believe in God I respected my mother faith Prakash Raj responds to criticism


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->