பெண்களை கேலி, கிண்டல் செய்த மூவர்; மது போதையில் பேருந்து பயணிகளிடம் அடாவடி செய்த வாலிபர்கள்; ஓட ஓட விரட்டிப் பிடித்த சிங்கப்பெண் அதிரடிப்படை..! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு எதிரான சிறு சிறு குற்றங்கள், பெண்களுக்கு பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை பெண்கள் பொறுத்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டிய சூழலிலேயே பெரும்பாலும் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சூழலில் புதிதாக தமிழக்தில் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு அவர்களை பாதுகாப்பும் விதமாக சிங்கப்பெண் சிறப்புப் படைப்பிரவை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன.

இந்நிலையில், சிவகாசியில் பெண்களை கிண்டல் செய்த மூன்று பேரைத் சிங்கப்பெண் அதிரடிப் படையினர் மடக்கி பிடித்துள்ளனர். சிவகாசி ஏ.வி.டி தெருவில் 03 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த இளம் பெண்களை கேலி கிண்டல் செய்வதாக சிங்கப் பெண் அதிரடி படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற சிங்கப்பெண் அதிரடி படை குழு, குற்றம் சாட்டப்பட்ட 03 பேரை சுற்றி வளைத்துள்ளனர். ஆனால், அதிரடிப்படை பெண் போலீசாரைப் பார்த்ததும் மூவரும் ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால் விடாமல் தெருக்களில் துரத்திச்சென்ற சிங்கப்பெண் படைப்பிரிவினர், அவர்களை மடக்கிப்பிடித்தனர். பிடிபட்ட மூவரையும் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள், மகேந்திரகுமார் என்ற குல்லமணி, செண்பகபாண்டி மற்றும் மகேந்திரன் என்பதும், இவர்கள் மூன்று பேரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்தது. மூன்று பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த அதிரடி சம்பவம் அப்பகுதியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

அடுத்ததாக மது போதையில் பேருந்து பயணிகளிடம் அடாவடி செய்தவர்களை பிடித்த அதிரடிப்படையினர், அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் கிளம்பிச் சென்ற அரசுப் பேருந்தினுள் குடி போதையில் சலம்பியபடி வந்த இரண்டு பேர் பேருந்து ஓட்டுநர்- நடத்துனர் மற்றும் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்த உடனே சிங்கப்பெண் அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்த திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபு, மாரீஸ்வரன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் மேல் நடவடிக்கைக்காக சிவகாசி நகர் காவல் நிலையப் போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.

அதேப்போன்று, சிவகாசி நகரின் தென்பகுதியில் இளைஞர்கள் சிலர் பெண்களை கேலி-கிண்டல் செய்வதாக வந்த அவசர அழைப்பின் பேரில் அப்பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது இளைஞர்கள் சிலர் சிங்கப்பெண் போலீசார்களைக் கண்டவுடன் தப்பியோடும் காட்சிகள் இணையத்தில் வைரலானது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Singappen Commando Squad to be reckoned with chased down and caught three men who had been harassing and mocking women


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->