விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா? விஜய்க்கு போட்டியான இயக்கமா ‘மக்கள் மேடை’! மனம் திறந்த லதா ரஜினிகாந்த் - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்தின் மனைவி லதா, ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் புதிய சமூக இயக்கத்தை தொடங்கியுள்ள நிலையில், அது ரஜினிகாந்தின் தூண்டுதலால் ஆரம்பிக்கப்பட்டது என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்தும், ரஜினி - விஜய் ஒப்பீடு குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் பேசிய லதா, “மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்காகவே ‘மக்கள் மேடை’ இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். அதன் மூலம் பல்வேறு சமூக முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் எங்கள் இயக்கத்தை அறிவித்த மறுநாளே அண்ணாமலையும் தனது இயக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்,” என்றார்.

மேலும், “எங்கள் இயக்கம் சார்பில் நல்ல காரியங்கள் நடைபெற்றபோது யாரும் அதைப் பற்றி செய்தி வெளியிடவில்லை. ஆனால் சர்ச்சைகள் உருவானால்தான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சாமானியர்கள் முதல் உயர்பதவியில் இருப்பவர்கள் வரை அனைவரும் எங்கள் இயக்கத்தில் இணைந்து செயல்படலாம். விருப்பப்பட்டால் அண்ணாமலையே கூட எங்கள் இயக்கத்தில் இணையலாம்,” என்று கூறினார்.

தனது செயல்பாடுகளை ரஜினிகாந்துடன் இணைத்துப் பார்க்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். “நான் செய்யும் காரியங்களுடன் என் கணவரை தொடர்புபடுத்த வேண்டாம். அவருடைய பாதை வேறு, குறிக்கோள் வேறு. என்னையும், அவரையும் இவ்வாறான விஷயங்களில் இணைத்து எழுதுவதை நிறுத்த வேண்டும்,” என்றார்.

பேட்டியின் போது, “விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த லதா, “பிரபலமானவர்களைப் பற்றி பலரும் பலவிதமாக பேசுவார்கள். ஆனால் பல ஆண்டுகளாக அறிந்த ஒரு நபரைப் பற்றி இப்படி பேசுவது தவறு. ரஜினி ஒரு பெரிய தலைவர். தலைமைத்துவ பண்பை பலர் அவரிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். அவர் பலருக்கும் முன்னுதாரணமாகவும், ரோல் மாடலாகவும் இருக்கிறார். அவரை இந்த அளவுக்கு தாழ்த்திப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று கூறினார்.

மேலும், “இவ்வாறான கருத்துகளை பேசுபவர்கள் மக்கள் மனதில் விஷத்தை விதைக்கிறார்கள். வாய் கூசாமல் பேசுவது தமிழ் மரபு அல்ல,” என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Rajini jealous of Vijay Is Makkal Medai a rival movement to Vijay Latha Rajinikanth opens up


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->